மலைப்பாம்புடன் மல்லுக்கட்டும் காஜல் அகர்வால்-வீடியோ!

 

மலைப்பாம்புடன் மல்லுக்கட்டும் காஜல் அகர்வால்-வீடியோ!

நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்: நடிகை காஜல் அகர்வால் மலைப்பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்-தெலுங்கு திரையுலகில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால், தற்போது ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தியில் கங்கனா ரனாஅத் நடிப்பி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘குயீன்’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

kajalaggarwal

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்ட நடிகை காஜல், தற்போது தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை துவக்கியுள்ளார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெறுகிறது.

இதற்காக தாய்லாந்தில் உள்ள வனவிலங்கு பூங்காவிற்கு சென்ற காஜல், பரமசிவன் போல் அங்குள்ள மலைப்பாம்பை தனது தோளில் வாரிப் போட்டுக் கொண்டு, அதனுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WHAT AN EXPERIENCE

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

அந்த வீடியோவில், பாம்பை உணர முடிகிறதா என்று ஒருவர் கேட்க, ஆம் என்னால் உணர முடிகிறது, பாம்பின் தசைகள் அசைவதை உணர முடிகிறது. அது மெதுவாக ஹிஸ் ஹிஸ் என்று சொல்லும் சத்தமும் கேட்கிறது. இந்த அனுபவம் அற்புதமாக உள்ளது என்று பகிர்ந்துள்ளார்.

மலைப்பாம்புடன் சாகசம் செய்யும் காஜல் அகர்வாலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.