மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து துண்டை வெளியே எடுக்கும் மருத்துவர்கள்… வைரல் வீடியோ!

மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து துண்டை வெளியே எடுக்கும் மருத்துவர்கள்… வைரல் வீடியோ!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மலைப்பாம்பு துண்டை விழுங்கி விட்டது. மருத்துவர்கள் போராடி வெற்றிகரமாக அந்த துண்டை வெளியே எடுத்துள்ளனர். 

மலைப்பாம்புகள் எந்த பொருள் கண் முன்னே நகர்ந்தாலும் உடனே வாய்க்குள் தள்ளிவிடும். மலையையே முழுங்கும் சக்தி இருப்பதால் தான் மலைபாம்பு என்று பெயர் வைத்தார்கள் போல. 

python-09

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு மலைப்பாம்பு துண்டை விழுங்கி விட்டது. மருத்துவர்கள் போராடி வெற்றிகரமாக அந்த துண்டை வெளியே எடுத்துள்ளனர். 

துண்டை வெளியே எடுப்பதற்காக – கால்நடைகள் ரேடியோகிராஃப்களின் கலவையைப் பயன்படுத்தியுள்ளனர்.துண்டின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க வளையும் தன்மை கொண்ட எண்டோஸ்கோப் ஒன்றை பாம்பின் வயிற்றுக்குள் செலுத்தினர். பின்னர் அதை கண்டவுடன் மெல்ல மெல்ல துண்டை வெளியே இழுத்தனர். 

இதை வெளியிட்ட மருத்துவர் “ ஆஸ்திரேலியாவில், மலைப்பாம்புகள் அவற்றின் உணவுக்கு பதிலாக பீச் துண்டுகளை சாப்பிடுகின்றன” என்று எழுதியிருந்தார்.”

துண்டு பாம்பின் வயிற்றிலிருந்து வெளியே எடுத்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.