மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்…. பெருந்தன்மையை காட்டிய இந்தியா

 

மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்…. பெருந்தன்மையை காட்டிய இந்தியா

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, இந்தியா தனது மதச்சார்பற்ற அஸ்திரவாரங்களிலிருந்து விலகுகிறது மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட பயன்படுத்தப்படுகிறது என கடந்த சில மாதங்களுக்கு முன் அப்போது மலேசிய பிரதமராக இருந்த மகாதிர் முகமது  சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இந்தியாவின் கோபத்தை கிளறிவிட்டார்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது

அண்மையில், மலேசியாவில் கூட்டணி கட்சிகளுக்கும் ஏற்பட்ட சண்டையால் மகாதிர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மலேசியாவின் புதிய பிரதமராக முஹைதீன் யாசின் பொறுப்பேற்றார். புதிய மலேசிய அரசு இந்தியாவுடான உறவை மீண்டும் புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டியது. தற்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கும்படி இந்தியாவிடம் மலேசிய அரசு கேட்டது. உடனே மத்திய அரசும் பழைய சம்பவங்களை எதையும் மனதில் கொள்ளாமல் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள்

இது தொடர்பாக மலேசிய வெளியுறவு துறை துணை அமைச்சர் கமருதின் ஜாபர் கூறுகையில், கடந்த 14ம் தேதியன்று இந்தியா 89,100 ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இறக்குமதி செய்ய மலேசியாவுக்கு அனுமதி அளித்துள்ளது. ஸ்டாக் கிடைப்பு பொறுத்து மேலும்  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்தார்.