மலேசியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது சிம்புவின் மாநாடு!

 

மலேசியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது சிம்புவின் மாநாடு!

நடிகர் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகர் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் மலேசியாவில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அரசியல் திரில்லரான இந்த படத்திற்காக சிம்பு லண்டனுக்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். 

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கவிருந்த நிலையில், சில காரணங்களால் படப்பிடிப்பு இந்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநாடு படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முதல் மலேசியாவில் தொடங்கவுள்ளது. அதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் இடையிலான காதல் காட்சிகள்  படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

maanadu

தற்போது சிம்பு, ஹன்சிகாவின் 50 வது படமான மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு இந்த வார இறுதிக்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.