மலிவு விலை சார்ஜரால் வெடித்த சிதறிய செல்போன்: இளைஞர் பரிதாப பலி!

 

மலிவு விலை சார்ஜரால் வெடித்த சிதறிய செல்போன்: இளைஞர் பரிதாப பலி!

உடனே இளைஞரை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சார்ஜ் போட்டிருந்த செல்போன் வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம்  கோபால்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது திடீரென்று அவரது செல்போன் வெடித்துள்ளது. இளைஞரின் வீட்டிலிருந்து பெரும் சப்தத்துடன் புகை வந்ததால் அங்கிருந்தவர்கள் ஓடி சென்று பார்த்துள்ளனர்.

cell

இதில் செல்போன் அருகிலிருந்த இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே இளைஞரை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

murder

மலிவு விலையில் கிடைக்கும் சார்ஜர்கள்  பயன்படுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது. மின்சாரத்தை செல்போனுக்கு எடுத்துச் செல்லும் போது, மலிவு விலையில் வாங்கியுள்ள சார்ஜர்கள் சரியாக இயங்காத காரணத்தால், அதிக அளவு மின்சாரம் பேட்டரிக்கு செல்லக்கூடும், இதனால் பேட்டரி சூடாகி செல்போன் வெடித்து விடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.