‘மலிவான அரசியலை ராகுல் கைவிட வேண்டும்’ : ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தாக்கு!

 

‘மலிவான அரசியலை ராகுல் கைவிட வேண்டும்’ : ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தாக்கு!

ராகுல் தமது அழைப்பை அரசியலாக்கியதால் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது என்று  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

 ஜம்மு காஷ்மீர் : ராகுல் தமது அழைப்பை அரசியலாக்கியதால் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது என்று  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மசோதாவைத் தாக்கல் செய்து அதற்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்குக் காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு  இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, காஷ்மீர் மக்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகவே இருப்பதாகவும், அங்கு அசாதாரண சம்பவங்கள் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன என்று தெரிவித்தார். இதுகுறித்து பதிலளித்திருந்த காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்,என்ன நடக்கிறது என்று தெரியாமல் ராகுல்காந்தி பேசுகிறார். விமானம் அனுப்புகிறோம். அவர் காஷ்மீரை பார்த்துவிட்டு பின்னர் பேசட்டும் என்று தெரிவித்திருந்தார். சத்யபால் மாலிக்கின் சவாலை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவுடன் நாங்கள் வருகிறோம் என்றார். 

rahul

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகருக்கு 12 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பயணித்த ராகுல் காந்தி விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்று ராகுல் அப்போது பேட்டியளித்தார்.

governor

இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்,  ராகுல் தமது அழைப்பை அரசியலாக்கியதால் அதனை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அமைதியைக் குலைப்பதற்காக எந்த ஒரு அரசியல்வாதியும் வரவேண்டாம் என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம். காஷ்மீர் குறித்த ராகுலின் தவறான கருத்துக்களைப் பாகிஸ்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும். மலிவான அரசியலைக் கைவிட்டு நாட்டின் பாதுகாப்பையும் நலனையும் ராகுல்காந்தி முன்னிலைப்படுத்த வேண்டும்’ என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.