மலாலா பற்றிய படம் குல் மக்காய் அடுத்த மாதம் வெளியாகிறது!

 

மலாலா பற்றிய படம் குல் மக்காய் அடுத்த மாதம் வெளியாகிறது!

பாகிஸ்தானில் 2012ம் ஆண்டு பள்ளி சென்றுவிட்டுத் திரும்பிய மலாலா யூசுப் என்ற மாணவியை தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் சென்றுவிட, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண் கல்விக்காக பேசிய சிறுமியை தாலிபான்கள் சுட்ட தகவல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மலாலாவுக்கு இங்கிலாந்தில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பெண் கல்வி பற்றி பேசியதற்காக சுடப்பட்ட மலாலா பற்றிய திரைப்படம் அடுத்த மாதம் 31ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
பாகிஸ்தானில் 2012ம் ஆண்டு பள்ளி சென்றுவிட்டுத் திரும்பிய மலாலா யூசுப் என்ற மாணவியை தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் சென்றுவிட, அவருக்கு பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெண் கல்விக்காக பேசிய சிறுமியை தாலிபான்கள் சுட்ட தகவல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மலாலாவுக்கு இங்கிலாந்தில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் உயிர் பிழைத்த மலாலா தொடர்ந்து பெண் கல்வி, குழந்தைகள் உரிமை பற்றி பேசி வருகிறார். அவருக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. 
குல் மக்காய் என்ற பெயரில்தான் தலிபான்களுக்கு எதிராகவும் பெண் கல்விக்காகவும் மலாலா போராடினார். அதனால், அந்த பெயரிலேயே மலாலாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என்று படத்தை இயக்கிய இயக்குநர் அம்ஜத் கான் தெரிவித்துள்ளார்.

 

இந்த படத்தில் மலாலா கதாபாத்திரத்தில் ரீம் ஷைக் என்ற குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார். மேலும், அதுல் குல்கர்னி, திவ்யா தத்தா, அபிமன்யூ சிங் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல்நாள் வசூல் மலாலா நடத்திவரும் அறக்கட்டளைக்கு அளிக்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆசியா, ஆப்ரிக்க நாடுகளில் பெண் குழந்தைகளின் கல்விக்காக மலாலா தொடர்ந்து போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.