மலாலாவை சுட்ட தலீபன் தீவிரவாதி சிறையிலிருந்து தப்பினான்.

 

மலாலாவை சுட்ட தலீபன் தீவிரவாதி சிறையிலிருந்து தப்பினான்.

பாகிஸ்தானின் பெஷாவரில் 2014-ம் ஆண்டு ராணுவபள்ளி மீதான தாக்குதலில் 149 பேர் பலியானது உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் பங்கேற்றவர் இசாநுல்லா இசான். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்தார்.ஆனால்,இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் இவர் மீது இதுவரை எந்தவிதமான குற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை

2012-ம் ஆண்டு பாகினின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண்கல்வி பற்றி பிரச்சாரம் செய்ததால் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டவர் சிறுமி மலாலா யூசப்சாய். இந்தத் தாக்குதலுக்கு தாலிபானின் பாகிஸ்தான் பிரிவு செய்தித் தொடர்பாளராக இருந்த இசாநுல்லா இசான் பொறுப்பேற்றார்.

பாகிஸ்தானின் பெஷாவரில் 2014-ம் ஆண்டு ராணுவபள்ளி மீதான தாக்குதலில் 149 பேர் பலியானது உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் பங்கேற்றவர் இசாநுல்லா இசான். இவர் கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்தார்.ஆனால்,இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் இவர் மீது இதுவரை எந்தவிதமான குற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ehsanullah-ihsan-01

இந்த நிலையில் நேற்று முந்தினம் இசாநுல்லாவின் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தப் பதிவில் ‘ பாகிஸ்தான் ராணுவத்துடன் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படிதான் நான் சரணடைந்தேன், மூன்று ஆண்டுகளாக நான் ஒப்பந்தத்தை பின்பற்றினேன்.ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மீறி என் குழந்தைகளையும் என்னுடன் சிறையில் அடைத்தனர்.அதனால் சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்தேன்.கடவுளின் உதவியால் ஜனவரி 11ம் தேதி தப்பிவிட்டேன். நான் ஒப்பந்தம் செய்து கொண்டது யாருடன், அதில் உள்ள நிபந்தனைகள் என்ன?,இதற்கு யார் உத்தரவாதம் தந்ததுயார் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

சிறையில் இருந்து இசாநுல்லா இசான் தப்பி இருப்பது தாலிபான்களுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து பாகிஸ்தான் ராணுவம் இதுவரையில் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.