மற்றொரு மத்திய அரசின் அறிவிப்பு, இன்னும் ஒருமுறை ஜகா வாங்கியது!

 

மற்றொரு மத்திய அரசின் அறிவிப்பு, இன்னும் ஒருமுறை ஜகா வாங்கியது!

ரயில்களில் பயணம் செய்யும்போது மசாஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், எந்த ஊரில் பயணம் செய்தாலும் இந்த வசதி கிடைக்காது, இந்தூரில் இருந்து கிளம்பும் ரயில்களில் மட்டுமே இது துவங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்கள். கலாசார காவலர்கள் கிளம்பிவிட்டார்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வள்ளுவர் இந்த இந்தி ஆஃபிசர்களுக்காவே எழுதியிருப்பார் போல. ஒவ்வொரு மாணவனும் மும்மொழி கற்கவேண்டும் என்று வரைவு திட்டத்தில் ஆலோசனை – உடனடியாக ரத்து; தமிழ்நாட்டில் ரயில்வே அதிகாரிகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் உரையாடவேண்டும் என்ற உத்தரவு – உடனடியாக ரத்து; ரயில்களில் பயணம் செய்யும்போதே மசாஜ் செய்துகொள்ள ஏற்பாடு – உடனடியாக ரத்து என காலையில் இட்ட உத்தரவை மாலையில் வாபஸ் வாங்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

Massage on running train

ரயில்களில் பயணம் செய்யும்போது மசாஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், எந்த ஊரில் பயணம் செய்தாலும் இந்த வசதி கிடைக்காது, இந்தூரில் இருந்து கிளம்பும் ரயில்களில் மட்டுமே இது துவங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டார்கள். கலாசார காவலர்கள் கிளம்பிவிட்டார்கள். மசாஜ் செய்துகொள்வது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என பிஜேபி எம்.பி. மற்றும் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிக்க, திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள். எண்ணித் துணிகடா கருமம் புடிச்சவய்ங்களா என வள்ளுவர் சொன்னது புரிஞ்சிக்க தமிழ் படிங்கடா தமிழ் படிங்கடான்னா கேட்க மாட்டேங்குறாய்ங்க!