மற்றொரு தமிழக எம்.எல்.ஏ. மரணம். மற்றொரு இடைத்தேர்தல்!

 

மற்றொரு தமிழக எம்.எல்.ஏ. மரணம். மற்றொரு இடைத்தேர்தல்!

ஒரு எம்.எல்.ஏ. இறந்து கிடக்கிறார், இந்நேரத்தில் இதுபற்றி பேச வேண்டுமா என அங்கலாய்க்க வேண்டாம்!. இதுதான் நேரம். கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும். ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் பற்றிய சொத்து விவரங்களை குறிப்பிடும்போது, அவர்களின் முழு உடல் பரிசோதனை அறிக்கையையும் வேட்பு மனுவோடு தாக்கல் செய்தே ஆகவேண்டும் என விதிகள் திருத்தப்பட வேண்டும்.

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி, உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆயினும், சிகிச்சை பலனின்றி அன்னார் உயிர் இன்று காலை பிரிந்தது.

Radha Mani

திமுக எம்.எல்.ஏ. ராதாமணியின் குடும்பத்தினருக்கும் அவருடைய கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளையில், 2-3 லட்சம் தொகுதி மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவர்களின் உடல்நலன் குறித்து கட்சிகள் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. கோடிக்கணக்கில் தேர்தல்கள் நடத்தப்பட்டு எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பியாகவோ தேர்வான இரண்டு மூன்று மாதத்தில் வேட்பாளர் இறக்கும்பட்சத்தில், திரும்பவும் தேர்தல் நடத்த வேண்டிய அவலம் இருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ. இறந்து கிடக்கிறார், இந்நேரத்தில் இதுபற்றி பேச வேண்டுமா என அங்கலாய்க்க வேண்டாம்!. இதுதான் நேரம். கலகம் பிறந்தால்தான் வழி பிறக்கும். ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்கள் பற்றிய சொத்து விவரங்களை குறிப்பிடும்போது, அவர்களின் முழு உடல் பரிசோதனை அறிக்கையையும் வேட்பு மனுவோடு தாக்கல் செய்தே ஆகவேண்டும் என விதிகள் திருத்தப்பட வேண்டும்.

ராதாமணி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!