மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் !

 

மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் !

மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப் போவதாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப் போவதாகத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பின்னர், இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு விசாரணையில், ஒரு மாநில அரசுக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று கூறி அந்த மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. 

ttn

இந்நிலையில், மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் இன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.