மறைமுக தேர்தல் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் !

 

மறைமுக தேர்தல் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்படும் !

இன்று காலை திமுக, மறைமுக தேர்தலை சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தது.

கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. மறைமுக தேர்தல் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்  நிறைவேற்றப்பட்டது. இந்த மறைமுக தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை திமுக, மறைமுக தேர்தலை சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தது. அதற்கு நீதிமன்றம் மனுவாகத் தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிப்பதாகத் தெரிவித்தது. 

ttn

அதன் படி, மறைமுக தேர்தல் சிசிடிவி காட்சிகள் மூலம் பதிவு செய்வது தொடர்பாக திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று பிற்பகல் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில்,  மாநகராட்சி மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி காட்சிகள் இன்னும் சமர்ப்பிக்கப் படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.