மறைமலை அடிகளாரைக் கண்டுக் கொள்ளாத திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக…! 

 

மறைமலை அடிகளாரைக் கண்டுக் கொள்ளாத திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக…! 

maraimalai adigal

திராவிடம் பற்றி பேசி ஆட்சியிலும் அமர்ந்து, அதன் பிறகு இன்று வரையில் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தின் அரியணையில் ஏற்ற விடாமல் செய்ததில் பேரறிஞர் அண்ணாவின் பங்கு மிகப் பெரியது. அவர் வழி வந்து இன்று தமிழகம் திராவிடக் கட்சிகளால் நிரம்பி இருக்கிறது. அவருடைய 111வது பிறந்தநாளை எல்லா கட்சிகளும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், திராவிடத்திற்கு முன்பு, தமிழ் பேசி ஆட்சியைப் பிடித்தவரின் வழி வந்தவர்கள், இன்று மறைமலை அடிகள் காலமான நாள் என்பதை மறந்து விட்டார்கள்.

தமிழ் மொழியில் இடம் பெற்றிருந்த பிறமொழிச் சொற்களைக் களைந்து விட்டு, தமிழ்ச் சொற்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர் மறைமலை அடிகள். தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும், வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். சீர்திருத்தச் செம்மல். மூடப் பழக்கவழக்கங்களையும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றையும் ஒதுக்கி அறிவியல் நெறியில் அறநெறி மேற்கொண்டவர். இவரது நினைவாக மறைமலை அடிகள் நூலகம், மறைமலையடிகள் கலைமன்றம் முதலியவை விளங்குகின்றன.
ஆனால் மருந்தளவிற்கு கூட இவரது நினைவு நாளான இன்று இவரை பற்றிய நினைவுகளை தமிழ் பேசி கட்சி வளர்க்கும் எந்த அரசியல் கட்சியும் பகிரவில்லை என்பது தான்  தமிழர்களின் தலையெழுத்து!