மறைந்த அருண் ஜெட்லியின் இறுதி சடங்கு இன்று மதியம் நடைபெறுகிறது….

 

மறைந்த அருண் ஜெட்லியின் இறுதி சடங்கு இன்று மதியம் நடைபெறுகிறது….

இன்று மதியம் டெல்லி நிகம்போத் காட்டில், மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் தகனம் நடைபெற உள்ளது.

பா.ஜ.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி தனது 66 வயதில் உடல் நலம் குறைவால் நேற்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அருண் ஜெட்லி நேற்று மருத்துவ சிகிச்சை பலன் இன்றி காலமானார். மறைந்த அருண் ஜெட்லியின் உடல் தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

அடுத்த சில மணி நேரத்தில் அருண் ஜெட்லியின் உடல் பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவற்காக வைக்கப்பட உள்ளது. அங்கு ஏராளமான தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். பின் பிற்பகலில் நிகம்போத் காட்டுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உடல் தகனல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்பட ஏராளமான தலைவர்கள் நேற்று அருண் ஜெட்லியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 2 வாரங்களுக்கு முன்புதான் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். இந்நிலையில் அருண் ஜெட்லியின் மறைவு நிகழ்வு பா.ஜ.வுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.