மறு சென்சாருக்கு சென்ற ‘சர்கார்’: தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்து!

 

மறு சென்சாருக்கு சென்ற ‘சர்கார்’: தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்து!

‘​​​​​​​சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் மறு சென்சார் பணி தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை: ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் மறு சென்சார் பணி தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சைகளை கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், வில்லியாக நடித்துள்ள வரலக்ஷ்மியின் கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்ட கோமளவள்ளி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரும்பாலான திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, பாதுகாப்புப் பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்ததையடுத்து, எடிட் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் காலை 10.30 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு பிற்பகல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.