மறு அறிவிப்பு வரும் வரை முழு ஊரடங்கு தொடரும் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 

மறு அறிவிப்பு வரும் வரை முழு ஊரடங்கு தொடரும் : பெரம்பலூர்  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.  குறிப்பாக பெரம்பலூரில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது.  குறிப்பாக பெரம்பலூரில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

gg

இந்நிலையில் பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழு பொது முடக்கம் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றி 8கிமீ அளவுக்கு முழு பொதுமுடக்கம் இன்று வரை அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மறு உத்தரவு வரும் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ffff

உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் திறக்கத் தடை என்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்பிருந்தது போல சிறிய மளிகைக் கடைகள் மட்டும் மதியம் 1 மணிவரை திறந்திருக்கலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.