மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொலைக்காட்சி நடிகை: குழப்பத்தில் மருத்துவர்கள்!

 

மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல தொலைக்காட்சி நடிகை: குழப்பத்தில் மருத்துவர்கள்!

தொலைக்காட்சி நடிகை Butsaran Thongchio மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து: தொலைக்காட்சி நடிகை Butsaran Thongchio மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த  Butsaran Thongchio பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரிஸ்களில் நடித்துள்ளார். இவருக்கு புகைப்பிடிப்பது, குடிப்பழக்கம் என்று எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. இதையடுத்து, அவரது இதயத்துடிப்பு திடீரென நின்றுபோனதால், அவர் உடனடியாக பாங்காக்கில் உள்ள ஸ்ரீராஜ் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த இவர் திடீரென உயிரிழந்தார். மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்த போதிலும்,இவருக்கு எப்படி ரத்தம் கசிந்தது என்பதை மருத்துவர்களால் கூட கண்டறிய முடியவில்லையாம்.

bu

அவரது  மரணம் குறித்து மருத்துவர்கள் குழு அளித்த செய்தியாளர் சந்திப்பில், ‘Butsaran Thongchio-க்கு மூளை வீக்கம் ஏற்பட்டதனால், மண்டைக்குள் ரத்த அழுத்தம் திடீரென குறைந்து, அவரது சுவாசக் குழாய் பாதிக்கப்பட்டது’ என கூறியுள்ளனர். இவரின் மரணத்துக்கான காரணம், அதிக ரத்த கசிவு, சுவாசக் குழாய் பாதிப்பு என கண்டறியப்பட்டாலும், ஆரோக்கியமாக இருந்த நடிகைக்கு திடீரென இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டது ஏன் என்று மருத்துவர்கள் மண்டையைப் பிச்சி கொள்கின்றன.