‘மருமகனுடன் உல்லாச வீடியோ லீக்’ : யார் பண்ண வேலைன்னு கண்டுபிடியுங்க ஆபிஸர்!

 

‘மருமகனுடன் உல்லாச வீடியோ லீக்’ : யார் பண்ண வேலைன்னு  கண்டுபிடியுங்க  ஆபிஸர்!

குஜராத்: மருமகனுடன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியானது குறித்து பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

video

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள குன்ஜிசார் கிராமத்தைச் சேர்ந்த 46 வயது மதிக்கத்தக்கப்  பெண் ஒருவர் தனது மருமகனுடன் உல்லாசமாக இருக்கும்  வீடியோ இணையத்தில் பரவியதால் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

crime

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும் போது, ’46 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணுக்கு 2 மகள்கள்,கணவர் இல்லை.இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில்  2-வது மகளின் கணவருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்த போது  எடுக்கப்பட்ட வீடியோவை யாரோ இணையத்தில் லீக் செய்துள்ளனர். இது அப்பகுதியில் பலரின் மொபைலுக்கும் சென்றுள்ளது. அந்த பெண்ணின் சகோதரி மகன் மொபைலுக்கு இந்த வீடியோ சென்றதாக அந்த பெண் புகாரின் கூறியுள்ளார். இதனால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.