மருந்துகள் அடித்தும் கூட அசராத கொசுக்கள்: டெங்கு காய்ச்சல் அபாயம்!

 

மருந்துகள் அடித்தும் கூட அசராத கொசுக்கள்: டெங்கு காய்ச்சல் அபாயம்!

டெங்குகாய்ச்சல் பரவத் தொடங்கி விட்டது. சென்னை, ராஜாஜி மருத்துவ மனையில் 8 பேருக்கு டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப் பட்டுள்ளது. 

தமிழகத்தில் மழைக் காலம் துவங்கிய நிலையில், கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாகி வருகின்றன. தேங்கி நிற்கும் நீர், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் மட்டைகள் போன்ற காரணிகள் மூலம் டெங்கு போன்ற உயிர்க் கொல்லி கொசுக்கள் உருவாகின்றன. டெங்குகாய்ச்சல் பரவத் தொடங்கி விட்டது. சென்னை, ராஜாஜி மருத்துவ மனையில் 8 பேருக்கு டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப் பட்டுள்ளது.

Dengue

 

இந்நிலையில், டெங்கு கொசுக்களை அழிக்கும் முயற்சியில் மாநகராட்சியும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ‘அபேட்’ என்ற ஒரு வகை மருந்தின் மூலம் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க முடியும் என்பதால், அந்த மருந்தைத் தெளித்து வருகின்றனர். ஆனால், வளர்ந்த டெங்கு கொசுக்கள் அபேட் மருந்துக்கு அசரவில்லை என மாநகராட்சி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Dengue preventions

இது குறித்துப் பேசிய மாநகராட்சி பணியாளர் ஒருவர்,’ டெங்கு கொசு நல்ல தண்ணீரில் தான் வளரும் என்பதால், டெங்கு காய்ச்சலை தடுப்பதில் மக்கள் பங்கே அதிகமாக உள்ளது. டெங்கு கொசு ஒரே நேரத்தில் சுமார் 500 முட்டையிடும். கொசுக்கள் வளராமல் புழு நிலையில் இருக்கும் பொது மட்டுமே அபேட் மருந்து டெங்கு கொசுக்களை அழிக்கும். கொசுக்கள் வளர்ந்து விட்டால், அபேட் மருந்துக்கு டெங்கு கொசுக்கள் அஞ்சாது. அதனால், மக்கள் தனது வீட்டைச் சுற்றி நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று மக்களுக்கு டெங்குவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.