மருத்துவ மூலை பயிர்களின் சாகுப்படிக்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நீங்க பயிர் மட்டும் பன்னுங்க நாங்க வெளிநாட்டுல விற்று கொடுக்குறோம்- நிர்மலா சீதாராமன்

 

மருத்துவ மூலை பயிர்களின் சாகுப்படிக்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! நீங்க பயிர் மட்டும் பன்னுங்க நாங்க வெளிநாட்டுல விற்று கொடுக்குறோம்- நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முதல் நாள் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும், இரண்டாவது நாள் விவசாயிகள், தொழிலாளர்களுக்குமான பொருளாதார உதவி திட்டத்தை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். இந்நிலையில் இன்று விவசாயம், கால்நடை, பால்வளம்,மீன்வளம், உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். சுயசார்பு திட்டத்தின் 11 அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. அவற்றில் 8 அறிவிப்புகள் விவசாய உள்கட்டமைப்பை சார்ந்ததவை. 

Nirmala sitharaman

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக ரூ.15 ஆயிரம் கோடியும் தேனி வளர்ப்புக்காக ரூ.500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் தேன் உற்பத்தியாளர்கள் பலன்பெறுவர். கால்நடைகளுக்கான நோய்த் தடுப்புத் திட்டத்துக்காக 13 ஆயிரத்து 343 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பால் பவுடர், வெண்ணய், சீஸ் போன்ற பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மருத்துவ மூலை பயிர்களின் சாகுப்படிக்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டமுடியும். இந்த நிதி மூலம் சிறு தானியங்கள், ஆர்கானிக், மூலிகை பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படும். தற்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள், பழங்களுக்கு விரிவுப்படுத்தப்படுகிறது. இந்த திட்டமே ஆபரேஷ கிரீன்ஸ் திட்டம். அத்தியாவசிய திருத்த சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகைப் பயிர்கள் பயிரிடப்படும்.கங்கை நதியின் இருபுறமும் மூலிகைத் தோட்டத்தை  வளர்க்க திட்டம்” என தெரிவித்தார்.