மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டண அதிகாரம் மாநில அரசுக்கு தான்! ராமதாஸ் அறிக்கை!

மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டண அதிகாரம் மாநில அரசுக்கு தான்! ராமதாஸ் அறிக்கை!

தமிழகத்தில் சென்றாண்டு வரையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணங்களை மாநில அரசு தான் நிர்ணயித்து வந்தது. மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்கின்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சமும், நிர்வாக இடங்களில் சேர்கின்ற மாணவர்களுக்கு ரூ.12 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. இந்த கட்டணம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான கட்டணமாகும்.

college

ஆனால், தற்போது இந்திய மருத்துவக் குழு இரு மடங்கு கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. நிரப்பப்படாமல் மீதமிருக்கும் 50 சதவீத இடங்களுக்கு தனியார் கல்லூரிகளே விருப்பம் போல கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையில் மாணவர்களிடம் ரூ.25 லட்சம் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ramadoss

மேலும் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த புதிய சீர்திருத்தம் மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதுடன், ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளையும் அடியோடு சிதைத்துள்ளது என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.