மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவு!

 

மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர  உத்தரவு!

வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது.

tt

இதனால் குடிமகன்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

ttn

இந்நிலையில் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  ஊரடங்கு காரணமாக மது விற்பனை தடையால் சிலர் தற்கொலை செய்ததையடுத்து முதல்வர் பினராயி விஜயன்  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.