மருத்துவர் சைமனின் மனைவிக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த்! மறு அடக்கம் செய்ய அரசிடம் வலியுறுத்துவதாக உறுதி!!

 

மருத்துவர் சைமனின் மனைவிக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த்! மறு அடக்கம் செய்ய அரசிடம் வலியுறுத்துவதாக உறுதி!!

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனா வைரசால் இறந்தவர்களுக்கு தம்முடைய இடத்தை அதாவது ஆண்டாள் கல்லூரியிலுள்ள ஒரு பகுதி இடத்தை அளிப்பதாக தெரிவித்தார்.

 

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி, சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக தனது மனகுமுறல்களை தெரிவித்தார்.
வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட சைமனின் உடலை, தொண்டியேடுத்து, (1-2)#COVID19 | @CMOTamilNadu pic.twitter.com/V03fgCxx6a

— Vijayakant (@iVijayakant) April 25, 2020

இந்நிலையில் விஜயகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்  சைமனின் மனைவி ஆனந்தி, சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக தனது மனகுமுறல்களை தெரிவித்தார். வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்ட சைமனின் உடலை, தொண்டியேடுத்து, கிறிஸ்துவ முறைப்படி சவப் பெட்டியில் வைத்து கல்லறை தோட்டத்தில் புதைக்க தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத்தர Dr.சைமனின் மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசிடம் தேமுதிக சார்பில் முறையிடப்படும் என்று உறுதியளித்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.