மருத்துவர் உடல் அடக்க விவகாரம்: தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை! 

 

மருத்துவர் உடல் அடக்க விவகாரம்: தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை! 

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மருத்துவர், கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் கல்லறைத் தோட்டத்தில் நடந்தன. ஆனால் அந்த கல்லறையில் அடக்கம் செய்யக்கூடாது என அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், கொரோனா தொற்றால் சென்னையில் உயிரிழந்தார். அவரின் சடலத்தையும் தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

highcourt

கொரோனா தொற்று காரணமாக பலியான சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏப்.28 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ??? என்றும் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.