மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

 

மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும். கொரோனா தடுப்புப்பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது.

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை விதிக்கப்படும். கொரோனா தடுப்புப்பணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது.மருத்துவர்களை காக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை துன்புறத்தினால் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். 

coronavirus

அனைத்து மாநில / யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.