“மருத்துவர்கள், செவிலியர்கள் கூட வெளியே செல்லக்கூடாது”..திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

 

“மருத்துவர்கள், செவிலியர்கள் கூட வெளியே செல்லக்கூடாது”..திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

அப்பகுதிக்கு மக்கள் சொல்கிறார்களா என கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2000ஐ எட்டியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் நுழையாத வண்ணம் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதிக்கு மக்கள் சொல்கிறார்களா என கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வருகிறது. 

ttn

இந்நிலையில் திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளோர் 42 பேர் வெளியே செல்ல தடை விதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை அவர்கள் வெளியே செல்லக் கூடாது என்றும் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் பணி நிமித்தமாக வெளியே சென்றால் நோய்த்தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.