மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வாங்கும் நிதியை பிரதமர் நிவாரணத்துக்கு வழங்கிய எய்ம்ஸ்? – டாக்டர்கள் கொந்தளிப்பு

 

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வாங்கும் நிதியை பிரதமர் நிவாரணத்துக்கு வழங்கிய எய்ம்ஸ்? – டாக்டர்கள் கொந்தளிப்பு

மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.50 லட்சத்தை பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வழங்கியதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது.

மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.50 லட்சத்தை பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வழங்கியதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியை பிரதமரின் பி.எம் கேர்ஸ் நிதியத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம் ஒதுக்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

pm-cares

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை ரெசிடென்ஷியல் மருத்துவர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவமனையின் சமூக பொறுப்புணர்வு திட்டம் ஆகியவை இணைந்து பிரதமரின் பி.எம் கேர்ஸ்-க்கு ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளன. இந்த நிதி உண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியாகும். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரி வருகிறோம். பாதுகாப்பு கவசம் இன்றி சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். ஆனால் அது பற்றி எய்ம்ஸ் நிர்வாகம் எதுவும் கூறவில்லை” என்றார்.

corona-equipments

ஆனால், இந்த செய்தியை எய்ம்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. பிரதமரின் நிதி திட்டத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்று அது கூறுகிறது. ஆனால் உண்மை நிலை என்ன என்று தெரியவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது 150 கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செய்திகள் மருத்துவர்களின் கடமை உணர்வை சிதைத்துவிடும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.