மருத்துவர்களுக்கான மாஸ்க் ஆர்டர் செய்யப்பட்டது எப்போது… முதலமைச்சர் பேட்டியால் குழப்பம்!

மருத்துவர்களுக்கான மாஸ்க் ஆர்டர் செய்யப்பட்டது எப்போது… முதலமைச்சர் பேட்டியால் குழப்பம்!

மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் வகையில் 3 ப்ளே மாஸ்க் ஆர்டர் செய்திருப்பது பற்றி அமைச்சர் ஒரு வாரத்துக்கு முன்பு பேட்டி அளித்திருந்த நிலையில் மீண்டும் முதலமைச்சர் அதை சொல்லியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

doctors-with-mask

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் பல மருத்துவமனைகளில் பாதுகாப்பு கவசங்கள் கூட இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு 1.5 கோடி மாஸ்க் வெளியிலிருந்து வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது. அதேபோல் 25 லட்சம் என்95 மாஸ்க் வாங்குவதற்கும் ஆர்டர் செய்துள்ளது என்றார்.

vijyabaskar-78

கடந்த வாரம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசும்போது, “மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்படுத்தும் வகையில் 3 ப்ளே மாஸ்க் 1 கோடி அளவில் ஆர்டர் செய்துள்ளோம்” என்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டது போன்று ஆர்டர் செய்த ஒரு கோடி மாஸ்க் வந்ததா, அது போதாதால்தான் கூடுதலாக 1.75 கோடி மாஸ்க் வாங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்தாரா? அல்லது விஜயபாஸ்கர் கூறியபடி ஆர்டர் செய்யவில்லையா? இப்போது ஆர்டர் செய்தால் எப்போது கிடைக்கும்? கொரோனா பாதிப்பு தடுப்பு பணிகள் எல்லாம் செயலிழந்து எல்லோருக்கும் பரவிய பிறகே மாஸ்க் வந்து சேருமா என்று பல்வேறு சந்தேகங்களை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். இவற்றை எல்லாம் கேட்டால் ஆன்டி இந்தியன் என்று முத்திரை குத்திவிடுவார்களே என்ற பயம் காரணமாக பலரும் வாய் மூடி அமைதியாக உள்ளனர்.