மருத்துவர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்…!

 

மருத்துவர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்…!

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிடில் சான்றிதழ் வழங்கப்படாது என்றும், அவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என்றும் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் போராட்டத்தைக் கைவிடும் படி மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார். 

Strike

அதனையடுத்து, 8 ஆவது நாளாக நீடித்த போராட்டத்தை அரசு மருத்துவர்கள் திரும்பப்பெறுவதாக, தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அரசின் கோரிக்கையை மதித்து தாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால் மருத்துவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.