மருத்துவரின் உயிரைக் காப்பாற்றிய கைக்கடிகாரம்! வாழ்நாளின் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்!

மருத்துவரின் உயிரைக் காப்பாற்றிய கைக்கடிகாரம்! வாழ்நாளின் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்!

ஆப்பிள் நிறுவனத்தில் கைகடிகாரத்தில் இதயத் துடிப்பை கண்காணிப்பது, நடந்து செல்கின்ற தூரம், நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பது உள்ளிட்ட  பல நவீன வசதிகள் இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணம் வகோவைச் சேர்ந்த, 79 வயதான கால்நடை மருத்துவர் ரே எமர்சன் தனது உயிரை, ஆப்பிள் வாட்ச் பயன்படுத்துவதன் மூலமாக காப்பாற்றிக் கொண்டுள்ளார். 

apple watch

ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இதய துடிப்பை கண்காணிக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, சமீபத்தில் எமர்சனின் இதய துடிப்பு சீராக துடிக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளார். இதனை எமர்சன் அணிந்திருந்த ஆப்பிள் நிறுவன வாட்ச் கண்காணித்து, அவரின் இதயத் துடிப்பு சீராக இல்லை என்று அவரை எச்சரித்துள்ளது. இதனையடுத்து உஷாரான மருத்துவர் எமர்சன், ஒழுங்கற்ற இதய துடிப்பினால் ஏற்படக்கூடிய ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பற்றிய அறிவிப்பை அருகில் உள்ள மருத்துவரிடம் உடனடியாகச் சென்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரை பரிசோதிதனைச் செய்த செயின்ட் டேவிட் சவுத் ஆஸ்டின் மருத்துவ மைய மருத்துவர்கள், மருத்துவர் எமர்சனுக்கு ஒழுங்கற்ற இதய துடிப்பை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றினர்.  தனது உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய ஆப்பிள் கைகடிகாரத்தை தன் வாழ்நாளின் விலைமதிப்பில்லாததாக கருதுவதாக இப்போது சந்தோஷமாக நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சொல்லி காட்டி வருகிறார் டாக்டர் ரே எமர்சன். இந்த சம்பவத்தை போலவே உலகம் முழுவதும் பலரின் உயிரை இதய துடிப்பு குறித்து அலர்ட் செய்து ஆப்பிள் வாட்ச் காப்பாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.