மருத்துவரின் அலட்சியம்! கண், காது மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை! இப்படியுமா நடக்கும்?

 

மருத்துவரின் அலட்சியம்!  கண், காது மூக்கு இல்லாமல் பிறந்த குழந்தை! இப்படியுமா நடக்கும்?

டாக்டருக்கு இப்போது 6 மாதம் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். ஐசியூ வாசலில் தவமிருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோர்கள்.

தவமிருந்து பெற்ற பிள்ளை என்கிறோம்…. நமக்கும் மிஞ்சிய சக்தி ஒன்று உள்ளது.. கடவுள் இருக்கிறார் என்பதெல்லாம் இந்த ஒரு விஷயத்தில் தான் மனுஷனுக்கு நம்பிக்கைத் தருகிறது. உலகம் முழுவதும் குழந்தை வரத்திற்காக லட்சக்கணக்கானோர் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்து மாதங்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் போது, அதற்கு பேர் வைத்து ஒவ்வொரு நிமிஷமும், வயிற்றுள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று பரிதவிக்கிற தாய்மார்களில் மொழி, இனம், நாடு என்று வேற்றுமை எல்லாம் இருக்க முடியாது. உலகம் முழுவதுமே தாய்பாசம் ஒன்றாக தான் இருக்கிறது. 

baby

போர்ச்சுகல் நாட்டில் மருத்துவரின் ஒருவரின் அலட்சியத்தால் முகமே இல்லாமல் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. போர்ச்சுகலின் செதுபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி தான் இப்படி கண், மூக்கு, வாய் என முகத்தில் எந்த உறுப்புகளுமே இல்லாமல், மண்டை ஓட்டின் ஒரு பகுதி முழுக்கவே சரியான வளர்ச்சியில்லாமல் பிறந்திருக்கிறது. இத்தனைக்கும் அந்த தாய்க்கு மூன்று முறை வெவ்வெறு காலகட்டங்களில் ஸ்கேன் எடுத்து குழந்தையின் வளர்ச்சியையும் பரிசோதித்திருக்கிறார் மகப்பேறு மருத்துவர் ஆர்ட்டர் கெர்வெல்ஹோ. சரியான வளர்ச்சியில்லையோ என்று 6வது மாதத்தில் சந்தேகத்தையும் கேட்டிருக்கிறார். அவற்றை அலட்சியப்படுத்தி, நான் மருத்துவரா? நீங்கள் மருத்துவரா என்று கேள்வி கேட்டு, அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத டாக்டருக்கு இப்போது 6 மாதம் பணியாற்ற தடை விதித்திருக்கிறார்கள். ஐசியூ வாசலில் தவமிருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோர்கள்.