மருத்துவமனையில் துரைமுருகன்! நலம் விசாரித்தார் ஸ்டாலின்!!

 

மருத்துவமனையில் துரைமுருகன்! நலம் விசாரித்தார் ஸ்டாலின்!!

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரைமுருகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

துரைமுருகன் - ஸ்டாலின்

இதேபோன்று கடந்த ஜூன் மாதம் மற்றும் நவம்பர் மாதத்தில் கூட  திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போரூர் இராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் திமுக பொருளாளர் துரைமுருகனை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து துரைமுருகன் நாளை வீடு திரும்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.