“மருத்துவத்தொழில் மீது மரியாதையை அதிகமாகியுள்ளது” : குணமடைந்த கொரோனா நோயாளி உருக்கம்!

 

“மருத்துவத்தொழில் மீது மரியாதையை அதிகமாகியுள்ளது” : குணமடைந்த  கொரோனா   நோயாளி உருக்கம்!

சீனாவிலிருந்து தப்பி வந்தது தனது அதிர்ஷ்டம். அதே சமயமா நான் கேரளாவுக்குத் தலைவணங்குகிறேன்’ என்றார்.  

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. 24 வயதான இந்த மாணவி,  சீனாவில் தனது மருத்துவப் படிப்பை பார்த்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது.

 

திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த மாணவி  குணமடைந்து வீடு திரும்பினார். 

 

இது குறித்துப் பேசியுள்ள அவர்,  ‘எனக்குள் இப்போது நேர்மறை எண்ணம் மட்டுமே உள்ளது. எனக்காக பலரும் பிரார்த்தனை செய்தார்கள். நான் உயிர் பிழைக்க பலரும் போராடினார்கள்.  நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக ஒருபோதும் நினைக்கவில்லை. மருத்துவத்தொழில் மீது முன்பை விட மரியாதையும் ஆர்வமும் அதிகமாகியுள்ளது. சீனாவிலிருந்து தப்பி வந்தது தனது அதிர்ஷ்டம். அதே சமயமா நான் கேரளாவுக்குத் தலைவணங்குகிறேன்’ என்றார்.