மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு; இலக்கியத்துக்கு நோபல் பரிசு இல்லை

 

மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு; இலக்கியத்துக்கு நோபல் பரிசு இல்லை

நடப்பாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படுகிறது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படவுள்ளன. அந்த வகையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

அதேசமயம், இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் ‘ஸ்வீடிஷ் அகாடமி’ பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளதால், இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 2018-ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019-ஆம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து அடுத்த ஆண்டு தேர்வு செய்யப் போவதாக அந்த அகாடமி அறிவித்துள்ளது.