மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் மார்கழி மாத விழா! 

 

மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் மார்கழி மாத விழா! 

மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் மார்கழி மாத விழாவினை முன்னிட்டு செந்தூர காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர்.

கோவை :

காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 

இக்கோயிலில் உள்ள மூலவர் அனுமந்தராயசாமி ஸ்ரீராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். 

maruthur hanuman

இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால் பக்தர்களின் சகல விதமான கோரிக்கைகளும் நிறைவேறுவதால் இத்தலத்து அனுமந்தராயசாமி அப்பகுதி மக்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறார். 

இக்கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயரை மனமுறுகி வேண்டுவதால் வழக்குகளில் வெற்றி பெறுவதாகவும், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதாகவும்,உடல்நிலை சரி இல்லாதவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதாகவும்,

திருமணம் ஆகாத இளம் வயதினருக்கு திருமணம் விரைவில் கைகூடுவதாகவும் அது மட்டுமல்லாது நமது வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இடையே நிலவி வருகின்றது.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாத மூல நட்சத்திர நாளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெறுகின்றது.
அதே போல் இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

hanuman

அதனையடுத்து நேற்று முன்தினம் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி அனுமந்தராயசாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை முடிந்து செந்தூர காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். 

இவ்விழாவினை முன்னிட்டு  புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவும், காரமடை சுற்று வட்டார பஜனைக் குழுவினரின் சிறப்பு பஜனையும் நடைபெற்றது. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை ,தேக்கம்பட்டி , புஜங்னூர்,

வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஆஞ்சநேயா அறக்கட்டளை மற்றும் பக்தர்கள் சார்பில் விழா ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.