மரத்துப்போன மனிதாபிமானம்- குளிரில் குற்றுயிராக கிடந்த குழந்தை-பணிப்பெண்ணின் பாசத்தால் காப்பாற்றப்பட்ட பச்சிளங்குழந்தை…

 

மரத்துப்போன  மனிதாபிமானம்- குளிரில் குற்றுயிராக கிடந்த  குழந்தை-பணிப்பெண்ணின் பாசத்தால் காப்பாற்றப்பட்ட பச்சிளங்குழந்தை…

 விஜயலஷ்மி செய்தது  அனைவருக்கும்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த பச்சிளங்குழந்தையை தனது  வீட்டுக்கு எடுத்து சென்று பால் கொடுத்து காப்பாற்றினாள் .

ஒரு குழந்தை அனாதையாக கிடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்… ,போலீசுக்கு தகவல் சொல்வீர்களா ?அல்லது நமக்கேன் வம்பு என குளிரில் நடுங்கட்டும் என அப்படியே போட்டுவிட்டு போவீர்களா ?ஆனால்  விஜயலஷ்மி செய்தது  அனைவருக்கும்  ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அந்த பச்சிளங்குழந்தையை தனது  வீட்டுக்கு எடுத்து சென்று பால் கொடுத்து காப்பாற்றினாள் .

ttn

பெங்களூரு நகரின் மையப்பகுதியில் ஜெயநகரில் ,வேகா சிட்டி மால் அருகில்  ஒரு மறைவிலிருந்து  ஒரு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை கடும் குளிரில் அழும் சத்தம் செவ்வாய் இரவு 8 மணிக்கு அந்த வழியாக போவோரின் காதுகளில் விழுந்தது ,ஆனால் ஒருவரும் அதை கன்டுகொள்ளவில்லை ,அப்போது அந்த வழியே வந்த  37 வயது பணிப்பெண் விஜயலஷ்மி காதுகளை அக்குழந்தையின் அழுகுரல் கேட்டது ,அப்போது இரண்டு குழந்தைகளின் தாயான அவர் ஓடோடி வந்து அந்த அனாதையான பெண் குழந்தையை எடுத்து செல்ல முற்படும்போது  அங்கிருந்த அனைவரும் உனக்கேன் வம்பு அப்படியே போட்டுவிடு என கூறினர்.

vijaya lakshmi

ஆனால் அந்த தாய் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் வீட்டுக்கு அநத குழந்தையை கொண்டு சென்று ,குளிப்பாட்டி ஆடை அணிந்து பால் கொடுத்ததால் ,அவரின் மகன் இதில்  சட்ட பிரச்சினை வருமென கூறி அருகில் உள்ள MICO layout போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார் .அங்கிருந்த போலீசார் குழந்தையை இந்திராகாந்தி ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு சென்று ஒரு வாரம் இங்கு வைத்திருந்து விட்டு பிறகு குழந்தை நல மையத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் .சட்டப் பிரிவு 317 ன் படி வழக்கு  பதிவு செய்து ,கைவிடப்பட்ட குழந்தையின் பெற்றோரை தேடி வருகிறார்கள் .