மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. ரூ.5.53 லட்சம் கோடி நஷ்டம்….. சென்செக்ஸ் 1448 புள்ளிகள் வீழ்ச்சி…..

 

மரண அடி வாங்கிய பங்கு வர்த்தகம்…. ரூ.5.53 லட்சம் கோடி நஷ்டம்….. சென்செக்ஸ் 1448 புள்ளிகள் வீழ்ச்சி…..

இந்த வாரத்தில் தொடர்ந்து 5வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1448 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனாவைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே சரிந்தது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ததை திரும்ப பெற தொடங்கியுள்ளனர். அதேபோல் உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். இது போன்ற  காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஐ.டி.சி. நிறுவன பங்கு விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா, டாடா ஸ்டீல் உள்பட 29 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 456 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,011 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 153 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.146.87 லட்சம் கோடியாக சரிந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையால் ரூ.5.53 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ், நிப்டி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,448.37 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 38,297.29 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 431.55 புள்ளிகள் சரிந்து 11,201.75 புள்ளிகளில் முடிவுற்றது.