மரணமடைந்த தாய்.. கொரோனா பணியை செய்து முடித்து விட்டு சென்ற சுகாதார அதிகாரி!

 

மரணமடைந்த தாய்.. கொரோனா பணியை செய்து முடித்து விட்டு சென்ற சுகாதார அதிகாரி!

 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 67 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆகவும்,  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆகவும் அதிகரித்துள்ளது.  இதில் 67 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். 

ttttn

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த அஷ்ரஃப் அலி  மாநகராட்சிக்கான துப்புரவுப் பொறுப்பாளராக உள்ளார். இவர்அப்பகுதியில் உள்ள வீடுகளில்  கிருமிநாசினி தெளிக்கும் பணியில்  ஈடுப்பட்டு வந்துள்ளார். அப்போது அவரது தாய் இறந்து விட்டதாக அவருக்கு செய்தி  வந்துள்ளது.

 

tn

இதனால் சம்பவ இடத்திலேயே கண்கலங்கிய அவர் தான் செய்து கொண்டிருக்கும் பணியை செய்து முடித்த பின்னரே இறுதி சடங்கிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து கூறிய அவர்,  ‘தாயை விட மதிப்புமிக்கது எதுவுமில்லை. ஆனால் தாய்க்கு அடுத்தது தாய் நாடு. காலை 8 மணியளவில் எனது தாயின் மரணம் செய்தி எனக்கு கிடைத்தது. ஆனாலும் நான் ஏன் பணிகளை முடித்து விட்டு மதியம் தான் வீட்டிற்கு சென்றேன்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையறிந்த பலரும் அவருக்கு ஆறுதலும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.