மரக்கன்றுகள் வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது!

 

மரக்கன்றுகள் வளர்ப்பில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி விருது!

ஈஷா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டமான ஈஷா பசுமை கரங்கள் 
தமிழகத்தில் உள்ள பசுமையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது.

ஈஷா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டமான ஈஷா பசுமை கரங்கள் 
தமிழகத்தில் உள்ள பசுமையை 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த பசுமை பள்ளி மூலம் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு, தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டர்கள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் எனப் பலரும் இதில் இணைந்து அவர்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதுவரை 3.3 கோடி மரங்கள் இந்த பசுமை பள்ளியின் மூலம் நடப்பட்டுள்ளன. அதே போல பள்ளிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கி அதனை மாணவர்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது.

ttn

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் பசுமை பள்ளியின்3-ஆம் ஆண்டு நிறைவு விழா ஈஷா பசுமை இயக்கம் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இன்று நடைபெற்றது. அதில் அமைச்சர் செங்கோட்டையன், மரக்கன்றுகளை முறையாக வளர்த்த 35 பள்ளிகளை பாராட்டி ஈஷா பசுமை விருது வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்க்கும் பண்பை உருவாக்கியதற்காக ஈஷா பசுமை பள்ளிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இதுவரை இந்த பசுமை பள்ளி மூலம்  45 லட்சம் நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.