மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பு!

 

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பு!

நாகை மாவட்டத்தின் முக்கிய சந்திப்பாகவும் திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களின் கூட்டு சந்திப்பாகவும் இருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி.

நாகை மாவட்டத்தின் முக்கிய சந்திப்பாகவும் திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களின் கூட்டு சந்திப்பாகவும் இருக்கிறது மயிலாடுதுறை நகராட்சி. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக தங்களை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். 

ttn

கொரோனா அச்சம் காரணமாக 31 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றோடு நிறைவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,மக்களின் கோரிக்கைக்கு இணங்க நாகையில் இருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கன்வே 5 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறையும் புது மாவட்டமாக அறிவிக்கப்பட்டால் மாவட்டங்களின் எண்ணிக்கை 38 ஆக உயரும்.