மம்முட்டிக்கு நன்றி தெரிவித்த சன்னி லியோன்! எதுக்கு தெரியுமா?

 

மம்முட்டிக்கு நன்றி தெரிவித்த சன்னி லியோன்! எதுக்கு தெரியுமா?

நடிகர் மம்முட்டிக்கு, சன்னி லியோன் நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகர் மம்முட்டிக்கு, சன்னி லியோன் நன்றி தெரிவித்துப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி பாலிவுட்டில் தற்போது முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் ரங்கீலா என்ற படத்தில்  நடித்து வருகிறார்.

sunny

இந்நிலையில் சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த மதுர ராஜா திரைப்படம் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சன்னி லியோன் நடனம் ஆடியிருந்தார். அந்த பாடல்  திரையில் தோன்றிய போது ஒட்டுமொத்த திரையரங்குமே எழுந்து நின்று விசலடித்தும், நடனமாடியும் சன்னி லியோனை ரசித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

இந்த நிலையில் தற்போது கேரள ரசிகர்களின் உற்சாகத்தை வரவேற்கும் விதமாக சன்னி லியோன் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மம்முட்டி உடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பதிவுசெய்துள்ளார் அதில்’ மம்முட்டி அவர்களுக்கும்,பெரும் வரவேற்பு அளித்த எனது ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: இலங்கை குண்டுவெடிப்பு: மனதை உருக்க வைக்கும் ரஜினி, கமல் ட்வீட்!