மம்தாவின் கோட்டையை கைப்பற்றுமா பாஜக: மேற்கு வங்க நிலவரம் இதுதான்!?

 

மம்தாவின் கோட்டையை கைப்பற்றுமா பாஜக: மேற்கு வங்க நிலவரம் இதுதான்!?

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி மக்களவைத் தேர்தல்   நிறைவடைந்தது.  இதை தொடர்ந்து இன்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

mamta

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. அங்கு  மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் – பாரதிய ஜனதாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில்  திரிணாமுல் காங்கிரஸ் 24 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக முதன்முறையாக, இங்கு அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

modi

இந்த தேர்தலில் மம்தாவின் கோட்டையான மேற்கு வங்காளத்தில் பாஜக 14 இடங்களைக்  கைப்பற்றியுள்ளது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது