மன்மோகன் சிங் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் திரும்புவார் என்று நம்புகிறேன்” : மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 

மன்மோகன் சிங் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் திரும்புவார் என்று நம்புகிறேன்” : மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இதையடுத்து  இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு 8.45 மணிக்கு  டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து  இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

 

தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. ஆனாலும் மருத்துவ கண்காணிப்பு தேவை என்பதால் அவர்  மருத்துவமனையில் உள்ளார் என்றும்  கூறப்படுகிறது. 

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ” முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அவர் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்.இது போன்ற ஒரு நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங்கின் சேவைகள் நம் நாட்டிற்கு தேவைப்படுகின்றன, அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் திரும்புவார் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.