மன்மத வியூகத்தில் மாட்டிக்கொண்ட முகிலன்.

மன்மத வியூகத்தில் மாட்டிக்கொண்ட முகிலன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய சமூக செயற்பாட்டாளர்களில் முக்கியமானவர் முகிலன்.ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த் முகிலன் என்கிற சன்முகம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மாயமானார்.

அதற்குமுன்,அவர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை துப்பாக்கிச்சூடு பற்றிய ஒரு காணொளியை வெளியிட்டு பேசி இருந்தார்.முகிலன் திடீரென மாயமானதால் பலவிதமான ஊகங்களால்,தமிழகமே பரபரப்பானது.

mugilan

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.அதைத்தொடர்ந்து தன்னுடன் போராட்டங்களில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுக்கு பாகியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக,முகிலன் மீது குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கிடத்தட்ட ஆறுமாதத் தேடலுக்குப் பிறகு திருப்பதியில் ரயில் மறியல் செய்ய முயன்றதாக முகிலன் கைது செய்யப்பட்டார்.

விசாரனையில் முகிலன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடாமல் இருந்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும்.இல்லா விட்டால் உன் குடும்பத்தையே அழித்து விடுவோம் என்று தன்னிடம் பேரம் பேசியது பற்றிப் பலதிடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.இதுவரை திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முகிலன் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுவிட்டதால் தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுச்செய்து இருந்தார்.

mugilan

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.முகிலனுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்குரைஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி,வழக்கின் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது.பாலியல் புகார் கூறுபவர் விபரம் தெரியாதவர் அல்ல.அவருக்கு 37 வயது ஆகிறது.சாஃப்ட் வேர் துறையில் பணியாற்றி இருக்கிறார்.அதுவும் 2017ல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கடந்த மார்ச் மாதத்தில்தான் புகார் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே திருமணமான முகிலன் தன் மனைவியை விவாகரத்துச் செய்யாமல் இவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பது தெரியாதா,என்று பல கேள்விகளை எழுப்பிய  நீதிபதி ஜி .ஆர் .சுவாமிநாதன் , மகாபாரதப் போரின்போது அபிமன்யூ சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்டது போல மனுதாரர் மன்மத வியூகத்தில் மாட்டிக்கொண்டு இருக்கிறார். அவர் கரூரில் தங்கி இருந்து இரண்டு நாளைக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்து இட வேண்டும்.விசாரணை நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.