’மன்மத ராசா’ இடத்தில் ஷூட்டிங் நடத்த தடை! 1,200 நடிகர்களுடன், லட்சங்களில் நஷ்டம்!

 

’மன்மத ராசா’ இடத்தில் ஷூட்டிங் நடத்த தடை! 1,200 நடிகர்களுடன், லட்சங்களில் நஷ்டம்!

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான `கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகம் வைரல் ஹிட். முதல் பாகத்தைத் தொடர்ந்து அதைவிட பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது கேஜிஎஃப் இரண்டாம் பாகம். இந்நிலையில், `இயற்கை வளங்ளை பாதிக்கும் வகையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகிறது’ என்று ஶ்ரீனிவாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.

பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான `கே.ஜி.எஃப்’ படத்தின் முதல் பாகம் வைரல் ஹிட். முதல் பாகத்தைத் தொடர்ந்து அதைவிட பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாய் உருவாகி வருகிறது கேஜிஎஃப் இரண்டாம் பாகம். இந்நிலையில், `இயற்கை வளங்ளை பாதிக்கும் வகையில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்படுகிறது’ என்று ஶ்ரீனிவாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்.
 ஏறத்தாழ 80கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த கேஜிஎஃப் படம் கன்னட திரையுலகிற்கு புதுசு. இத்தனை பெரிய பட்ஜெட் படங்கள் கன்னடத்தில் இதுவரையில் வெளியானதில்லை. தவிர,கன்னட  சினிமாவில் முதல் முறையாக 5 மொழிகளில் தயாராகி வெளியானதும் கே.ஜி.எஃப் படம் தான். அதுமட்டுமன்றி மஸ்திகுடியில் ஏற்பட்ட ஓர் விபத்தினால், மொத்த படக்குழுவுக்கும் இன்ஸூரன்ஸ் போடப்பட்ட பிறகே, படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்திருக்கின்றனர்.

kgf

முதல் பாகத்தில் செட்டோடு சேர்த்து, கிராஃபிக்ஸும் படத்திற்கான விஷுவலைத் தூக்கிக் கொடுத்தது. இதற்காக கர்நாடாகாவில் உள்ள கோலார் கோல்டு ஃபீல்டுக்கு அருகில் உள்ள சைனைடு மலை எனும் இடத்தில் பிரமாண்ட செட் அமைத்து படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வந்தனர். முதல் பாகத்தின் ஷூட்டிங் அங்குதான் நடந்தது. படத்தின் தொடர்ச்சிக்காக இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கும் அதே செட்டில் தான் தற்போது வரை நடைபெற்று வந்தது. ‘மன்மத ராசா’ என்று தனுஷும், சாயா சிங்கும் குத்தாட்டம் போட்டார்களே… அந்த இடத்தில் தான் ஷூட்டிங் நடத்துவதற்கு தற்போது பிரச்சனை எழுந்திருக்கிறது. 
 அந்தப் பகுதியில் இருக்கும் மலைகளைக் குடைந்து இந்தப் படத்திற்கான செட்டை அமைத்திருப்பதாகவும், இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது என்றும் ஸ்ரீனிவாஸ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோலார் நீதிமன்றம், ”இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கும் வரை குறிப்பிட்ட அந்த மலைப்பகுதியில் படப்பிடிப்புநடக்கக்கூடாது” என தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் கடும் வருத்தத்தில் இருக்கிறது படக்குழு.

judge

படத்தில் கூட்டம் காட்டுவதற்காக பல்வேறு பகுதியைச் சேர்ந்த 1,200 பேரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தினசரி 500 ரூபாய் சம்பளம் தருவதாகவும், இதிலேயே பல லட்சம் ரூபாய் செலவாவதாகும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. முதல் பாகத்தைப் போல் இந்தப் பாகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும், படக்குழுவுக்கும் இன்ஷூரன்ஸ் போடப்பட்டிருக்கிறது. 

`நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். தீர்ப்பு வரும் வரை சைனைடு மலையில் ஷூட்டிங் நடக்காது. `கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் படப்பிடிப்பு 6 மாத காலம் இதே செட்டில்தான் நடைபெற்றது. படத்தின் தொடர்ச்சிக்காக இரண்டு மாதத்திற்கு முன்புதான் இங்கு படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஒரே நாளில் மொத்த படப்பிடிப்பும் முடிய இருந்த நிலையில் இப்படி ஆகிவிட்டது. இருப்பினும், சட்டப்படி இப்பிரச்னையை சமாளிப்போம்” என்றார் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா.