மன்மதன் பாணியில் மாநாட்டை தொடங்கிய சிம்பு! வைரல் வீடியோ

 

மன்மதன் பாணியில் மாநாட்டை தொடங்கிய சிம்பு! வைரல் வீடியோ

நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் புதிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் புதிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. 

கடைசியாக சிம்பு நடிப்பில்  வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கடைசியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து உடம்பை குறைக்க லண்டன் சென்ற சிம்பு , மிகவும் ஸ்லிம்மாக எடையைக் குறைத்து இந்தியா திரும்பினார். 

தற்போது ஹன்சிகாவின் மஹா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பின்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் ‘மாநாடு’  படத்திலும் நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில் இந்த படம் குறித்து புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சிம்பு மாநாடு படத்தின் ஸ்கிரிப்ட் வைத்து படித்துக்கொண்டிருக்கிறார். கேமரா மெல்ல அவர் முகத்தை நோக்கி நகர்கிறது. பின்னணியில் மன்மதன் பிஜிஎம் ஒலிக்க பக்கா மாஸாக  சிம்பு அதில் காட்சியளிக்கிறார். அந்த வீடியோ வழக்கம் போல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.