மனைவி ஷாலினியுடன் ‘தல’ அஜித்…மிரள வைக்கும் வைரல் போட்டோஸ்!

 

மனைவி ஷாலினியுடன் ‘தல’ அஜித்…மிரள வைக்கும் வைரல் போட்டோஸ்!

அதில், கோட் சூட் உடையில் அஜித் மிகவும் இளமையான தோற்றத்தில்,  தாடி இல்லாமல் இருக்கிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூரே  தயாரிக்கும் இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில்  அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.போலீஸ் அதிகாரி கேரக்டர் என்பதால்  கார் சேசிங் காட்சிகள்  படத்தில் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது.  இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது.

ttn

இதையடுத்து சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்துள்ளார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ttn

 இதை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் #GetWellSoonTHALA என்ற ஹேஷ்டாக்கை  அவரது  ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வந்தனர். 

tt

இந்நிலையில் ஓய்வுக்கு பிறகு அஜித் மனைவி ஷாலினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கோட் சூட் உடையில் அஜித் மிகவும் இளமையான தோற்றத்தில்,  தாடி இல்லாமல் இருக்கிறார்.

ttn

வில்லன் படத்திலிருந்த அஜித் போல மீண்டும் இளமை தோற்றத்திற்கு மாற்றியுள்ள அஜித்தின் புகைப்படத்தை  கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.