மனைவி, மாமனார், மாமியார், மச்சினியைக் கொன்ற இந்தியர், அமெரிக்காவில் கைது!

 

மனைவி, மாமனார், மாமியார், மச்சினியைக் கொன்ற இந்தியர், அமெரிக்காவில் கைது!

இது மிகவும் சிக்கலான கேஸ் என்பதால், மேலதிக தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டார்கள். மனைவி மற்றும் அவரது உறவினர்கள் என நான்கு பேரைக் கொன்ற குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில், குர்பிரீத்துக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது!

இந்தியாவை பூர்வீகமாகக்கொண்டு, அமெரிக்க குடியுரிமை பெற்ற நான்கு பேர் கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கனரக லாரி ஓட்டுநராக பணிபுரிந்துவந்த குர்ப்ரீத் சிங்கின் மனைவி, அவரது பெற்றோர், மற்றும் சகோதரி என நான்குபேர் துப்பாக்கியால் இருமுறை சுட்டுக்கொல்லப்பட்டனர். பணிமுடித்து வீடு திரும்பிய குர்பிரீத் சிங், மனைவி மற்றும் உறவினர்கள் கொல்லப்பட்டது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறை வந்து உடனடியாக விசாரணை மேற்கொண்டாலும், குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

Murder victims

முழுதாக மூன்று மாதங்கள் விசாரணை மேற்கொண்ட அமெரிக்க போலிசார், குர்பிரீத் சிங்கையே கொலைக்குற்றவாளி எனக் கண்டறிந்து அவரை கைது செய்திருக்கிறார்கள். கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கி, கொலை நடந்த வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் ஒரு குளத்தில் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான கேஸ் என்பதால், மேலதிக தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டார்கள். மனைவி மற்றும் அவரது உறவினர்கள் என நான்கு பேரைக் கொன்ற குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில், குர்பிரீத்துக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது!