மனைவி பாதி, சகோதரர் பாதி இணைந்து கலக்கும் “தம்பி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா…! 

 

மனைவி பாதி, சகோதரர் பாதி இணைந்து கலக்கும் “தம்பி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா…! 

கைதி படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் சூரஜ் சதனா தயாரிப்பில்  உருவாகும் தம்பி என்ற படத்தில் நடித்துவருகிறார்.

கைதி படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் சூரஜ் சதனா தயாரிப்பில்  உருவாகும் தம்பி என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் நடிகையும், தனது அண்ணியுமான ஜோதிகாவுடன் இணைந்து முதல்முறையாக கார்த்திக் நடித்துள்ளார். மனைவி மற்றும் சகோதரர் நடித்த படத்தின் தம்பி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்தியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டிசம்பர் 2019 என பதிவிடப்பட்டுள்ளது. இதனால் இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தம்பி படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்றும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்ல் தெரிவித்துள்ளார். கார்த்தியின் கைதி படம் வசூல் வேட்டையை வாரி சுருட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தப்படம் அதற்குள் தயாரானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.