மனைவி திருந்த கோவிலுக்கு சென்ற கணவன்… ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற மனைவி!

 

மனைவி திருந்த கோவிலுக்கு சென்ற கணவன்… ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற மனைவி!

ஆவடியைச் சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன். இவர் கடந்த 29ம் தேதி சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் ரயிலிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், “நான் ரயிலிருந்து தவறி கீழே விழவில்லை. அரக்கோணம் அருகே ரயில் பெட்டியில் யாரும் இல்லாதபோது, முகத்தில் கர்சீப் கட்டிய மூன்று பேர் என்னை ஓடும் ரயிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். என் மனைவி மீது எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மனைவி திருந்த வேண்டும் என்று கோவிலுக்கு சென்ற கணவனை ஆட்களை விட்டு ரயிலிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடியைச் சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன். இவர் கடந்த 29ம் தேதி சென்னையிலிருந்து திருத்தணி செல்லும் ரயிலிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், “நான் ரயிலிருந்து தவறி கீழே விழவில்லை. அரக்கோணம் அருகே ரயில் பெட்டியில் யாரும் இல்லாதபோது, முகத்தில் கர்சீப் கட்டிய மூன்று பேர் என்னை ஓடும் ரயிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். என் மனைவி மீது எனக்கு சந்தேகமாக உள்ளது” என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், ராஜேந்திரனின் மனைவி அஸ்வினியை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் கொலை முயற்சியை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் அனுராக் என்பவருக்கும் தொடர்பு உள்ளதை கணவர் கண்டுபிடித்துவிட்டார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்துகொண்டே இருந்தது. என்னால், அனுராக்கை விடவும் முடியவில்லை. இந்த நிலையில், என்னுடன் சண்டை போட்டுவிட்டு, நான் திருந்த வேண்டும் என்று கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ய திருத்தணி முருகன் கோவிலுக்குப் போகப் போவதாகக் கூறிவிட்டு ராஜேந்திரன் சென்றார். இந்த தகவலை அனுராக்கிடம் கூறினேன். அவர்கள்தான் இதை செய்துள்ளார்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து அனுராக், அவரது கூட்டாளிகள் கமலேஷ், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அனுராக் கூறுகையில், “திருத்தணிக்கு செல்வதாக ராஜேந்திரன் செல்வதாக அஸ்வினி கூறினார். இதனால் என்னுடைய நண்பர்கள் இருவரைக் கூட்டிக்கொண்டு ராஜேந்திரனைப் பின்தொடர்ந்தோம். அவரை கொலை செய்ய வேண்டும் ஆனால் அது தற்கொலை போலத் தெரிய வேண்டும், நாம் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று திட்டமிட்டோம். இதனால், ஓடும் ரயிலிருந்து தள்ளிவிட்டால் ராஜேந்திரன் இறந்துவிடுவார். அது விபத்து என்று நினைத்துவிடுவார்கள் என்று நினைத்து அப்படி செய்ய முயன்றோம். 
அரக்கோணத்தில் யாராவது வண்டியில் ஏறிவிட வாய்ப்புள்ளது என்பதால் அவரை அதற்கு முன்பாகவே தள்ளிவிட வேண்டும் என்று நினைத்தோம். முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு ராஜேந்திரனை தள்ளிவிட்டோம். ஆனால் ரயில் வேகம் குறைவாக இருந்ததால் ராஜேந்திரன் தப்பிவிட்டார்” என்று கூறினார்.